இலங்கை

டெங்கு காய்ச்சலினால் 90 பேர் உயிரிழப்பு!!!

டெங்கு காய்ச்­ச­லினால் இவ்­வ­ருடத்தின் முதல் பத்து மாத­கா­லத்தில் 90 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், நாட­ளா­விய ரீதியில் 72 ஆயி­ரத்து 305 பேர் காய்ச்­ச­லினால் பீடிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்­திய அதி­காரி அரு­ண­ஜ­ய­சிங்க தெரி­வித்தார்.

கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 15,220 பேர் டெங்கு காய்ச்­ச­லினால் பீடிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது,

கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்­டங்­க­ளிலேயே அதி­க­மான டெங்கு நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். நாட்டில் அதி­க­ரித்து வரும் மழை கார­ண­மாக டெங்கு நுளம்­புகள் பர­வக்­கூ­டிய வாய்ப்புக்கள் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் மக்கள் சுற்­றா­டலை சுத்­த­மாக வைத்­தி­ருப்­பதில் கவனம் செலுத்­தா­மையும் டெங்கு காய்ச்சல் அதி­க­ரிப்­புக்கு ஒரு கார­ண­மாகும்.

டெங்கு நுளம்­பு­களை ஒழிக்கும் நட­வ­டிக்­கை­களில் முப்­ப­டை­யி­ன­ரையும்  ஈடுப­டுத்­து­வ­தற்­கான செயற்­றிட்­ட­மொன்று தயா­ ரிக்­கப்­பட்­டுள்­ளது. என்­றாலும்  பொது மக்களும் தமது சுற்றாடலை சுத்த மாக வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுப் பது அவசியமாகும் எனவும் அவர் குறிப் பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker