‘டெங்கு ஒழிப்பு செயற்பாடு’ ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள 05 அமைப்புகள் ஒன்றுசேர்ந்து டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை களத்தில் மேற்கொள்வதற்கான செயத்திட்டம்.

தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டதாக காணப்படுகின்றது.
இவற்றினை கருத்திற் கொண்டு டெங்கு ஒழிப்பு தொடர்பான செற்பாட்டினை எமது பிரதேசத்தில் மேற்கொள்வதற்கான சரியான திட்டத்தினை பிரதேச செயலாளரின் தலைமையில் நெறிப்படுத்துவதற்காக கடந்த 2019.12.17 ஆம் திகதி அன்று ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம்,ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கம், கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையம் மற்றும் Alayadivembuweb.lk இணையத்தளம் மற்றும் ஆலையடிவேம்புவெப் சமூக அமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை களத்தில் மேற்கொள்வதற்கான அமைப்பினை உருவாக்குவதற்கான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குவது தொடர்பான கூட்டமொன்றினை ஏட்பாடு செய்துதருமாறு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைப்புகள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாகவே பிரதேச செயலாளர் K.லவநாதன் அவர்கள் கருத்தில் கொண்டு 2019.12.24 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான செற்பாட்டினை களத்தில் மேற்கொள்வதற்கான அமைப்பினை உருவாக்குவதற்கான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குவது தொடர்பான கூட்டம் ஒன்றினை ஏட்பாடுசெய்து அதனில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து டெங்கு ஒழிப்பு தொடர்பாக கோரிக்கை விடுத்த மேற்படி ஐந்து அமைப்புகளும் இன்றைய தினம் (20) மாலை 04.30 மணியளவில் இடண்டாவது முறையாக ஒன்று கூடி 24 ஆம் திகதி பிரதேச செயலாளரினால் ஒழுங்கு செய்யப்பட்டு இருக்கும் கூட்டத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என கருத்துப்பரிமாற்றம், ஆலோசனை மற்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் இவ் டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாட்டிற்கு ஆலையடிவேம்பில் உள்ள ஏனைய சமூக அமைப்புகள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் என்பன தங்கள் பங்களிப்பினை வழங்குமாறு அழைக்கின்றார்கள்.