எஸ்.எல்.சி.யின் தடைக்கு எதிராக திலங்க மேன்முறையீடு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, தன்னை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து இடை நீக்கம் செய்தமைக்கு சுயாதீன விசாரணை கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராகவிருந்த ஹரின் பெர்னாண்டோ, திலங்க சுமதிபால எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் எந்த வித பதவிகளை வகிக்கவோ அல்லது நிர்வாகத்தில் எந்த வித நடவடிக்கையில் ஈடுபடவோ கூடாது எனக்கூறி இந்த தடையை விதித்தார்.
திலங்க சுமதிபால சூதாட்ட தொழில் துறையுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக ஐ.சி.சி.வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டே அவருக்கு இந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே அவர் இந்த உத்தரவுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.