ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் அஷ்டோத்திர சத 108 மகா சங்காபிஷேகம்….

அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த (30.07.2024) அன்று ஆரம்பமாகி கோலாகலமாக இடம்பெற்று வருவதுடன்.
இன்றைய தினம் (08) காலை 9.00 மணியளவில் கும்பாபிஷேக தின அஷ்டோத்திர சத 108 மகா சங்காபிஷேகம் பக்தி பூர்வமாக பல பக்த அடியார்கள் சூழ இடம்பெற்றது.
மேலும் இன்றைய தினம் மாலை 5.00 மணியளவில் நாக சதுர்த்தி விசேட பொங்கல் நிகழ்வும் நாளை (09) வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவம் என்பனவும் இடம்பெறவுள்ளது.