ஆலையடிவேம்பு
சிவகாமி அன்னையின் ஜனன தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு உதவும் ஆட்டோ சங்க ஊழியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு…

சிவகாமி அன்னையின் 84வது ஜனன தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு உதவும் ஆட்டோ சங்க 24 ஊழியர்களுக்கான உலர்உணவு நிவாரணத்தை பொத்துவில் பிரதேச செயலாளர் R.திரவியராஜ் மற்றும் அன்னை சிவகாமி அறக்கட்டளையின் இனைப்பாளர் சோ.வினோஜ்குமார் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
இலங்கையிலும் கொரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபன் அவர்களினால் பத்து வருடங்களுக்கு மேலாக பல சேவைகளை இலங்கையில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.