தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் அரச திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்படுகின்ற போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் 3ஆம் இடம்…


ஜே.கே.யதுர்ஷன்
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேசிய உற்பத்தித்திறன் 2020 ம் ஆண்டுக்கான விருது வழங்கல் போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினை தட்டிச்சென்றுள்ளது.
திருக்கோவில் பிரதேச செயலக வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறான சாதனை இடம் பெற்றுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலகம் ஒன்று பெற்றுள்ள அதிகூடிய தரப்படுத்தல் நிலை (Best Rank) இது என்பது குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.
புள்ளியிடல் திட்டத்தில் மொத்த புள்ளியானது 650-750க்கு இடைப்பட்ட புள்ளிகளைப்பெற்று 3ஆம் இடத்தினை திருக்கோவில் பிரதேச செயலகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்..
இவ் விருதுக்கான மதிப்பீடு பிரதேச செயலகங்களில் பொது மக்களுக்காக வழங்கப்படும் சேவைகளை மதிப்பிடுதல் மற்றும் இலத்திரனியல் நுட்பங்களை (e-productivity) உட்புகுத்தி விரைவான சேவையை வழங்குகின்ற ஆற்றல் என்பன இவ் மதிப்பீட்டில் பிரதானமாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன.
மேலும் இப் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர் வரும் 2022 ம் வருடம் ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.




















