இலங்கை
சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையங்களில் சுகாதார பிரிவினர் திடீர் பரிசோதனை!!!

ஜே.கே.யதுர்ஷன்
சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வியாபார விற்பனை நிலையங்களை திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் தலைமையிலான சுகாதார குழுவினர் திடீர் சோதனைக்குட்படுத்தினர்.
மேலும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு சுகாதார பிரிவினரால் அறிவுரையும், சுகாதார விதிகள் மற்றும் சட்டங்கள் பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டது.