சமூக அமைப்புக்கள் மற்றும் பல அரச நிறுவனங்கள் இணைந்து ஆலையடிவேம்பில் டெங்கு ஒழிப்பு செயத்திட்டம் வெள்ளி அன்று ஆரம்பம்…

தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டதாக காணப்படுகின்றது.
இவற்றினை கருத்திற் கொண்டு டெங்கு ஒழிப்பு தொடர்பான செற்பாட்டினை எமது பிரதேசத்தில் மேற்கொள்வதற்கான சரியான திட்டத்தினை பிரதேச செயலாளரின் தலைமையில் நெறிப்படுத்துவதற்காக கடந்த 2019.12.17 ஆம் திகதி அன்று ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம்,ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கம், கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையம் மற்றும் Alayadivembuweb.lk இணையத்தளம் மற்றும் ஆலையடிவேம்புவெப் சமூக அமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை களத்தில் மேற்கொள்வதற்கான அமைப்பினை உருவாக்குவதற்கான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குவது தொடர்பான கூட்டமொன்றினை ஏட்பாடு செய்துதருமாறு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இவ்வாறு அமைப்புகள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாகவே பிரதேச செயலாளர் K.லவநாதன் அவர்கள் கருத்தில் கொண்டு இன்று (2019.12.24) செவ்வாய்கிழமை பி.ப 3.00 மணிக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாட்டினை களத்தில் மேற்கொள்வதற்கான அமைப்பினை உருவாக்குவதற்கான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குவது தொடர்பான கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் K.லவநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் கூட்டத்தில் மேல் பெயர்குறிப்பிட்ட 05 அமைப்புகள், ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் இன்னும் சில அமைப்புக்களும் கலந்துகொண்டு மேலும் பிரதேச சபை தவிசாளர் மேலும் அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு எதிர்வரும் வெள்ளி கிழமையில் இருந்து ஆலையடிவேம்பு சகல பிரதேசங்களையும் டெங்குநுளம்பை அழிப்பதற்கான சிரமதான பணிகளை சமூக அமைப்புகள், அதனுடன் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது என தீர்மானம் எடுக்கப்பட்டது.
இவ் டெங்கு ஒழிப்பு செயத்திட்டத்தில் ஆலையடிவேம்பு இளைஞர்கள் இணைந்து கொள்ளுங்கள் மற்றும் இணைந்து கொள்ளலாம்
மேலதிக விபரங்களுக்கு 0771925225