இலங்கை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எச்சரிக்கை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைந்த பின்னர் அமைதியாக கலைந்து செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு பரீட்சை மண்டபம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டால், பரீட்சைகள் சட்டத்துக்கு அமைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால், பெறுபேறுகளை நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.