இலங்கை
தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
எனினும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 72ஆவது சுதந்திர தினம் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வருகைத் தற்துள்ளனர்.