இலங்கை
3 மாத குழந்தை உட்பட 26 பேரை பலியெடுத்த கொரோனா : இலங்கையில் தொடரும் சோகம்!!

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றினால் 3 மாத குழந்தை உட்பட 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
காலி, ஹெட்டிபொல, பல்லேவெல, கண்டி, மத்துகம, பாதுக்கை, மீகஹகொடை, அக்குரஸ்ஸ, மொரான்துடுவை, அநுராதபுரம், கொழும்பு – 6, கலுஹக்கல, மொரட்டுவை, மல்வானை, கொழும்பு – 15,
பொரளை, கந்தானை, மாஸ்வெல, வத்தேகம, மாலபே ஆகிய பகுதிகளிலும் யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும் நேபடை ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
14 ஆண்களும் 11 பெண்களும், 3 மாத குழந்தையொன்றும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.