இலங்கை
கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு அமெரிக்கா விஜயம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இந்த விஜயம் அமையவுள்ளது.
மேலும் இதில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.