உலகம்
குறைந்த வருமானம் உடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி! இணைந்த 18 நிறுவனங்கள்!

பங்களாதேஷ், சீனா, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் அமைந்துள்ள 18 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பூசி ஒன்றை தயாரிக்க ஒன்றிணைந்துள்ளன.
குறித்த தடுப்பூசியை குறைந்த வருமானம் உடையவர்களுக்கு மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு பெற்றுக் கொடுப்பதே அவர்களது நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்கள் “Medicines Patent Pool” என்ற இலாப நோக்கமல்லா அமைப்பின் கீழ் இணைந்துள்ளன.
தற்போதைய நிலையில் ஜேர்மனியின் பயோ என் டெக் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் பைபர் நிறுவனம் இணைந்து கொவிட் தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ள நிலையில், நாடுகள் சிலவற்றில் 43,000 பொது மக்களுக்கு அதனை செலுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.
அதன் முதற்கட்ட பெறுபேறாக 90 சதவீதமானோருக்கு குறித்த தடுப்பூசி சாதகமாக பெறுபேற்றை பெற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.