உலகம்
மெக்சிகோவில் பஸ் மீது ரயில் மோதி விபத்து : 9 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
மெக்சிகோவின் குவரிடாரோ மாநிலம், சான் ஜூவான் டெல் ரியோ நகரில் இடம்பெற்ற சம்பவத்தில் ரயிலில் சிக்கிய பஸ் வண்டி, நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பஸ்ஸில் நசியுண்ட பயணிகளை பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரயில் வருவது தெரிந்தும் பஸ் சாரதி தண்டவாளத்தை கடக்க முயன்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சாரதி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.