உலகம்
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தொடர்பாக சுகாதார அமைப்பு கருத்து

கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை விஞ்ஞானிகளினால் உருவாக்க முடியுமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகத்தில் பெரும்பாலான நாடுகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான மருந்தை கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை காலமும் கொரோனா வைரஸிக்கான தடுப்பு மருந்தையோ தடுப்பூசியையோ எந்தவொரு நாட்டு விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையிலேயே தடுப்பூசியை விஞ்ஞானிகளினால் உருவாக்க முடியுமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.