கனடாவில் உள்ள சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தினால் நிவாரணம் வழங்கி வைப்பு

இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தின் கணபதிபுரம் கிராமத்தில் உள்ள 41 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் அம்பாறை மாவட்டத்தின் பழவெளி கிராமத்தில் உள்ள 19 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வீ.ரி.சகாதேவராஜா, கோரக்கர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் சோ.தினோஸ்குமார், சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சோ.வினோஜ்குமார், கோயில் தலைவர் சுரேஸ் அவர்களும் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
கனடாவில் உள்ள சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தின் தலைவர் வல் புருஷோத்தமன், செயலாளர் நித்திய சிவானந்தராஜா மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் மக்கள் நன்றியைத் தெரிவித்தனர். இவ்நிவாரணப்பணி இலங்கையில் உள்ள பிந்தங்கிய கிராமங்களில் கட்டம் கட்டமாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.











