உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் ஏற்பாட்டில் மரம் நடுகை மற்றும் மாபெரும் சிரமதானம்….

பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் உள்ளூராட்சி வாரத்தின் சுற்றாடல் மற்றும் மர நடுகை தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் (16) மரம் நடுகை மற்றும் அக்கரைப்பற்று பொது மயானத்தை துப்பரவு செய்யும் மாபெரும் சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆரியாதாச தர்மதாச தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதி தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி பிரதேசசபை செயலாளர் கலிலுள் ரஹ்மான் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானம் மற்றும் மரம் நடுகை என்பன இடம்பெற்றது.
குறித்த சிரமதனத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச சமூக நற்பணி மன்றம் அமைப்பினர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரும் கலந்துகொண்டு தங்கள் மகத்தான பங்களிப்பை வழங்கி இருந்தார்கள்.