அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் கழிவகற்றல்: மக்கள் மத்தியில் எழுந்த விமர்சனம் தொடர்பாக பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன் ஆராய்வு.

அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையில் பாவனைக்கு உதவாத பொருட்களின் கழிவகற்றலை கடந்த வாரத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை கழிவகற்றல் பிரிவினர் மேற்கொண்டிருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கழிவகற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என மக்கள் மத்தியில் இருந்து விமர்சனம் எழுந்திருந்தது.
இதன்போது அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் அப்துல் நசீர் அவர்களுடனான கலந்துரையாடலில் குறித்த விடயங்கள் தொடர்பாகவும் மேலும் தற்போது காணப்படும் அபிவிருத்தி குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்டதுடன்.
இவ் வைத்தியசாலையின் கழிவகற்றலை சம்பந்தப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என்பது தொடர்பாகவும் மேலும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் மீள் உருவாக்கம் தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கி இருந்ததாக ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆ.தர்மதாச தெரிவித்திருந்தார்.
வைத்தியசாலை விஜயத்தின் போது ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பா.கதிகரன் ஆகியவர்கள் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



