உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, மொஸ்கோ இப்பகுதியில் “திட்டமிட்டு” தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார்.
மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்துவது, உக்ரேனின் கடல்சார் தளவாடங்களுக்கான அணுகலைத் தடுககும் மொஸ்கோவின் முயற்சி என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
டிசம்பர் மாத தொடக்கத்தில், கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக உக்ரேனின் கடலுக்கான அணுகலைத் துண்டிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தினார்.
“நிழல் கடற்படை” என்பது 2022 ஆம் ஆண்டு உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பின்னர் விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான டேங்கர்களைக் குறிக்கும் ஒரு சொல்.
திங்கட்கிழமை (23) மாலை தாக்குதடல்கள் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கி, ஒரு சிவிலியன் கப்பலை சேதப்படுத்தியதாக பிராந்திய ஆளுநர் கூறினார்.
இது நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அண்மையது ஆகும் – இது இப்பகுதியில் பல நாட்களாக மின்சார விநியோகத்தை சீர்குலைத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் 120,000 பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு பெரிய துறைமுகத்தில் தீ விபத்துக்கும் வாழிவகுத்தது.
இது டஜன் கணக்கான மாவு மற்றும் தாவர எண்ணெய் கொள்கலன்களை அழித்தது.
கடந்த வாரம், ஒடேசாவின் கிழக்கே உள்ள பிவ்டென்னி துறைமுகத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர்.
இந்த வார தொடக்கத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் தனது மூன்று குழந்தைகளுடன் காரில் பயணித்த ஒரு பெண் கொல்லப்பட்டார்.
மேலும் உக்ரேன் மற்றும் மொல்டோவாவை இணைக்கும் ஒடேசா பிராந்தியத்தின் ஒரே பாலம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.



