இலங்கை
ரணில் – மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
கொழும்பு 3 இல் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் பிரதமரின் கீழ் வரும் புதிய நிறுவனங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இருப்பினும் குறித்த சந்திப்பில் அரசியல் விவகாரம் குறித்து எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.