சீனத் தயாரிப்பு தடுப்பூசியைப் பெற்ற பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!


சீனத் தயாரித்த தடுப்பூசியைப் பெற்ற பின்னர் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்து பிலிப்பைன்ஸின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) எச்சரித்துள்ளது.
ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டேவின் நெருங்கிய தொடர்பில் இருந்த பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக குழுவின் தலைவர் திங்களன்று கூறினார்.
ஆனால் ஜனாதிபதி இன்னும் சரியான அல்லது பொருத்தமான தடுப்பூசிக்காக காத்திருப்பதாக செய்தி அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
இந்தநிலையில், பிலிப்பைன்ஸின் உணவு மற்றும் மருந்து நிர்வாக (எஃப்.டி.ஏ), இயக்குநர் ஜெனரல் ஒரு அறிக்கையில், ‘நன்மை ஆபத்தை விட அதிகமாகும் என்பதைக் காட்ட நியாயமான அறிவியல் சான்றுகள் இருந்தால் மட்டுமே தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
எந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியும் இதுவரை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகாரம் பெறவில்லை.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 470,000க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் 9,124 இறப்புகள் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
				
					


