திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை கூடம், கழிவகற்றல் முகாமைத்து கூடம் அடிக்கல் நாட்டல் நிகழ்வு Dr.மசூத் தலைமையில்…

ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை திருக்கோவில் ஆதாரவைத்திய சாலையில் வைத்திய அதியட்சகர் Dr.மசூரத் அவர்களின் தலைமையில் கீழ் ஆதார வைத்திய சாலையில் உள்ள குறைபாடுகளின் ஒன்றான சத்திர சிகிச்சை கூடம் மற்றும் கழிவகற்றல் முகாமைத்துவம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருக்கோவில் ஆதாரவைத்திய சாலை வளாகத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.G.சுகுணன் அவர்களின் ஆலோசனையின் கீழ் நேற்றைய தினம் 2021/10/05 தினம் ஆரம்ப கட்ட அடிகல் நாட்டப்பட்டது.
அத்துடன் விரைவில் திருக்கோவில் வைத்தியசாலையில் நிரந்தர பொது வைத்திய நிபுணர் சேவையும் சிறுபிள்ளைகள் வைத்திய நிபுணர் சேவையும் மற்றும் கண்கிளீக் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.மசூத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன் நிகழ்வில் கல்முனைபிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.வாஜித் மற்றும் பிராந்தியசுகாதார திட்டமிடல் அதிகாரி Dr.மாஹிர் மற்றும் திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சக ஊழியர்கள் கிராம சேவையாளர்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.