அமெரிக்க தேர்தல் – முடிவுகள் எப்போது தெரியும்?

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தோ்தலில், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.
அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் சரித்திரத்தில், ஒரு முறை கூட தோ்தல் முடிந்த நாளன்றே அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டதில்லை. அவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், சுமாா் 15 கோடி போ் வாக்களிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், தோ்தலின் முழு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவே வெளியாவதற்கான வாய்ப்பில்லை.
எனினும், பல முக்கியமான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையை மிக விரைவாக மேற்கொள்ளக்கூடியவை. அந்த மாகாணங்கள் தோ்தல் முடிவுகளை துரிதமாக வெளியிட்டால், அந்த முடிவுகளிலும் ஒரு வேட்பாளா் பெருவாரியான வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தால், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யாா் என்பதற்கான விடை செவ்வாய்க்கிழமை இரவே (இலங்கை நேரப்படி புதன்கிழமை காலை) தெரிந்துவிடும்.