இலங்கையில் கொவிட் தடுப்பூசி திட்டம் சீர்குலைவு – வெளிவந்துள்ள குற்றச்சாட்டு

இலங்கையில் கொவிட் -19 தொற்றுநோய் செயற்கையாக கட்டுப்படுத்தப்படுவதாக அனைத்து இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெயந்த பண்டாரா தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் இது தொடர்பில் தெரிவிக்கையில், கொவிட் நோயாளிகளின் பரவல் விஞ்ஞான ரீதியாக ஒப்பிடும்போது அவ்வளவு வேகமாக குறையாது என்று கூறியுள்ளார்.
முந்தைய பி.சி.ஆர் சோதனைகளுடன் ஒப்பிடும்போது குறைவான சோதனைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சரியான சூழ்நிலையை மறைப்பதன் மூலம் நாடு சரியான முடிவுகளை எடுப்பதைத் தடுக்க முடியாது என்றும் கடுமையான ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொவிட் தடுப்பூசி திட்டம் நாட்டில் சீர்குலைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், அஸ்ட்ராசெனெகா கொவிட் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தியது என்ற கருத்து தவறானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.