இலங்கை
இலங்கையில் கணினி சார்ந்த 40,000 தொழில்வாய்ப்புக்கள் – 10,000 பட்டதாரிகளை உருவாக்க திட்டம்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் 10,000 தொழில்நுபட்ப கணினி பட்டதாரி மாணவர்களை இணைத்துக்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த மாதம் முதல் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இலங்கையில் கணினி சார்ந்த 40,000 தொழில்வாய்ப்புக்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடுகின்றார்.
இந்த வேலைவாய்ப்புக்களுக்கான வெற்றிடங்களை கருத்திற் கொண்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும்; இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆகிய இணைந்து, இணைய வழியூடான பட்டப்படிப்பு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.