இலங்கை
கொழும்பில் இளம் மனைவியை அடித்து கொலை செய்த கணவன்!!

கொழும்பு, மஹரகம பிரதேசத்தில் கணவர் ஒருவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்சினை நீண்ட தூரம் சென்றமையினால் இரும்பு கம்பியால் கணவன், மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.
மஹரகம , பமுனுவ வீதி பிரதேசத்தில் நேற்று இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 33 வயதுடைய பெண் ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது வரையில் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.