உலகம்
சுஷாந்த் சிங் விஷம் வைத்து கொலை செய்யப்படவில்லை -மருத்துவ நிபுணர்க் குழு!

நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முறைப்பாட்டை எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்க்குழு மறுத்துள்ளது.
சுஷாந் சிங்கின் மரண வழக்கில் பல குழப்பங்கள் நீடித்து வருகின்ற நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கு தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் உதவியையும் நாடியிருந்தனர்.
இதனையடுத்து சுஷாந்தின் உடற்கூராய்வு அறிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்த மருத்துவ குழுவினர் சுஷாந்தின் அறையையும் ஆராய்ந்து தற்கொலை நடந்த நிகழ்வை மறுபடியும் நிகழ்த்திப் பார்த்துள்ளனர்.
இதையடுத்து சி.பி.ஐ.யிடம் நேற்று அறிக்கை அளித்துள்ளனர். குறித்த அறிக்கையில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



