Uncategorisedஆலையடிவேம்பு
இயற்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவைக்க நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் செய்யற்பாடு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று ஆரம்பம்….

ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகள் இணைந்து நாட்டின் இயற்கை பேரிடரில் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ள பிரதேச மக்களுக்காக நிவாரண பொருட்களை சேரிக்கும் செய்யற்பாடு இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதேச நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை ஆர்வத்துடன் வழங்கி வருவதனை கணக்கூடியதாக இருந்தது.



