இலங்கை
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கான அறிவிப்பு


இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 323,339 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 288,307 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அதிகரித்துள்ள நிலையில்.
இதுவரையில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை கூட செலுத்திக் கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் முதலாவது டோஸை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.



