விளையாட்டு
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இன்று ஆரம்பம்


கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியாக்கும் வகையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஆர்மபமாகின்றது.
குறித்த தொடர் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி நிறைவுக்கு வருகின்ற நிலையில் சுமார் 92 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் குறித்த தொடரின் முதல் போட்டியில் இன்று அஸ்டன் வில்லா மற்றும் ஷெஃபீல்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.
மேலும் அனைத்து போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் நிர்வாகம் அறிவித்துள்ளது.



