ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் வழங்கிய நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மலையக மக்களை நோக்கி இன்றைய தினம் சென்றது….

ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகள் இணைந்து நாட்டின் இயற்கை பேரிடரில் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ள பிரதேச மக்களுக்காக நிவாரண பொருட்களை சேரிக்கும் செய்யற்பாடு கடந்த 04 நாட்களாக இடம்பெற்று நிவாரணப் பணிகள் நிறைவு பெற்று இன்று (06) காலை 7.00 மணியளவில் மலையகம் நோக்கி நிவாரணக் குழுவினர் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர்.
இதன் போது ஆலையடிவேம்பு பிரதேச செயலக மஹா கணபதி மற்றும் ஆதி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வாகனங்கள் முன் தேங்காய் உடைத்து சம்பிரதாயபூர்வ நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் பிரதேச நலன் விரும்பிகள் என பலரும் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு நிவாரணக்குழுவினரை வழியானுப்பி வைத்திருந்தார்கள்.
குறித்த நிவாரணப்பணிகளுக்கு அக்கரைப்பற்று ராம் கராத்தே அமைப்பினர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பெரும் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி இருந்தார்கள்.



