ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 01.01.2026 காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாச தலைமையில் குறித்த நிகழ்வானது பிரதேச சபை வளாகத்தில் இடம் பெற்றது.
நிகழ்வு தவிசாளரால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர், ஆலையடிவேம்பு பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் என அனைவரும் சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர்.



