ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற அறநெறி மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு….

சிறுவர் தினம் கடந்த (01) திகதி ‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ் வருட சிறுவர் தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் (04) ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் சிறுவர் தின நிகழ்வு கவடாப்பிட்டி கதிரேசன் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் கண்ணகிபுரம் அறநெறி பாடசாலை மாணவர்கள் என்பவர்களை உள்ளடக்கியதாக கண்ணகிபுரம் திரு/கண்ணகி வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம்(ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் தலைமையின் இந்து மாமன்ற செயலாளர் திரு.ந.சுதாகரன்(விரிவுரையாளர்) அவர் மற்றும் Alayadivembuweb.lk இணையக்குழு உறுப்பினர்கள் பங்களிப்புடன் சிறப்பானதாக இடம்பெற்றது.
இன் நிகழ்வு காலை 9.00 மணியளவில் சைவ சமய முறைப்படி ஆரம்பிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து சிறுவருக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று அதனில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மேலும் வருகைதந்த மாணவர்களுக்கு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் மற்றும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


























































