ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச அரசு ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.

ஆலையடிவேம்பு பிரதேச அரசு ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் பிரதேச வருடாந்த பொதுக்கூட்டம் அதன் தலைவர் வா.குணாளன் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தின் பொருளாளர் கோணேஸ்வரன் அதிதியாக கலந்துகொண்டார்.
நிருவாக தெரிவின் போது நடப்பு வருடத்தின் அதே நிருவாகம் சபையோரால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் வா.குணாளன் செயலாளர் வி.சிவன்செயல் பொருளாளர் தமயந்தி ஆலோசகராக க.இரத்தினவேல் ஆகியவர்கள் நிருவாக சபை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.



