நிவாரணப்பணிகளில் சமூக நலன் சார்ந்த குடும்பங்களும் தனவந்தர்களும் இணைந்துள்ளனர்.

வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த பிரபுகுமார் பவன் கொரோனா அச்சம் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள பெண்தலைமைத்துவம் தாங்கும் 20 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பின் ஊடாக இன்று வழங்கி வைத்தார்.
சமூக மட்டத்தில் பலர் பொருளாதார வசதி வாய்ப்புக்களுடன் உள்ள நிலையில் தானாக முன்வந்து இவ்வாறான நிவாரணப்பணியை வழங்கியமையிட்டு அன்புக்கரங்கள் அமைப்பு பெருமை கொள்வதுடன் அவருக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டனர்.
இப்பணியை மேற்கொள்வதற்காக குறித்த பிரிவின் கிராம உத்தியோகத்தர் சுமாணவதி மற்றும் பிரிவில் உள்ள திசாந்தன் உள்ளிட்டவர்களுக்கும் அன்புக்கரங்கள் அமைப்பு நன்றியினை தெரிவித்துக் கொண்டது.
நிகழ்வில் அமைப்பின் உறுப்பினரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான சு.சிறிதரன் மற்றும் உறுப்பினர் வி.சுகிர்தகுமார் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.