இலங்கை
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவி வழங்கி வைப்பு.

திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த பெண்தலமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் தாய்க்கு அக்கரைப்பற்று சிறுவர் நன்னடத்தை திணைக்களக பொறுப்பதிகாரி திரு.கே.ஜெயதாஸ் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இன்று (04) வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவி வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த தொழில் மேம்பாட்டு உதவித்திட்டத்தில் கோழி வளர்ப்பிற்கான Rs. 25,000/- நிதி உதவி அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக பணிப்பாளர் திரு.வே.வாமதேவனால் பிரான்சில் வசிக்கும் திரு.திருமதி. கஜமுகன் விஸ்ணுப்பிரியா தம்பதிகளின் புதல்வியின் பிறந்தநாளை முன்னிட்ட அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.