வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்


கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர்.
இரு மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த 88 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்புக்காகச் சென்ற 29 இலங்கையர்கள் அபுதாபியிலிருந்து இன்று அதிகாலை 12.40 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் கட்டாரிலிருந்து 37 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதேபோன்று கட்டாரிலிருந்து மேலும் 22 இலங்கையர்களும் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாட்டை வந்தடைந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்துடன், அதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.



