இலங்கை
பூரண குணமடைந்தார் கொரோனா தொற்றுக்கு உள்ளான முதல் இலங்கையர்

இத்தாலி, பிரேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த இலங்கைப் பெண் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.

அவர் முழுமையாக குணமடைந்த நிலையில், வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாக இத்தாலியின் மிலானிற்கான இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் வசித்து வரும் 46 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வௌியுறவு அமைச்சு அண்மையில் குறிப்பிட்டது.
குறித்த பெண் பிரேசியாவில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளாரென இத்தாலியின் மிலானிற்கான இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.



