ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் ஒருங்கிணைப்பில் நடந்த 108 பானை பொங்கலுடன் ”பொங்கல் பெருவிழா 2026’’ நிகழ்வு….

ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் ஒருங்கிணைப்பில் ”பொங்கல் பெருவிழா 2026’’ நிகழ்வு கடந்த 08 ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

நிகழ்வில் அம்பாறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,
மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன், இ.சிறிநாத் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஆர்.தர்மதாச மற்றும் பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

கௌரவ அதிதிகளாக ஒய்வுபெற்ற பிரதம உள்ளக கணக்காய்வாளர் கனகரெத்தினம், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ், ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட அதிபர்கள், பிரதேச அனைத்து இந்து ஆலய தலைவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற தலைவர் தணிகாசலம், பிரதேச அனைத்து விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகநாதன், ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நற்பணி மன்றத்தின் தலைவர் மனோகரன் ஆகியோரும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

”பொங்கல் பெருவிழா 2026’’ நிகழ்வின், ”108” பானை பொங்கல் நிகழ்வு ”108” பானை பொங்கல் படையல் மற்றும் வழிபாட்டு நிகழ்வு கோலப்போட்டி மற்றும் போத்தலில் நீர் நிரப்புதல் சிறு பிள்ளைகளுக்கான மிட்டாய் பிறக்குதல் போட்டி அதற்கான பரிசு வழங்கல் நிகழ்வுகள். கலை கலாச்சார நிகழ்வு அறுவடை நிகழ்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவை சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் புதிய சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்குடன் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட பண்டைய விவசாய பொருட்களின் கண்காட்சி மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள். சிறந்தவிவசாயி மற்றும் சிறந்த சேவையாளர்கள் என இரு பிரிவில் கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் மேலும் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு வழங்கிய பிரதேச அனைத்து அமைப்புகளுக்கும் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினர் மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker