ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பில் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வுகள்

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (NILET) நடாத்தபட்ட 120 மணித்தியாலய இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் (22) அக்கரைப்பற்று திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக விவேகானந்தா வித்யாலயத்தின் அதிபர் ஜனார்த்தனன் மேலும் அதிதிகளாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகிர்தகுமார் களம் கல்வி நிலையத்தின் தலைவி காந்திமதி பாடநெறியினை கற்பித்த ஆசிரியர்கள் சனத் ஜெயசிங்க சரோஜா தேவநாயகம் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் சிறப்பானதாக அமைந்திருந்தது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker