”அவன் கனவில் ஒரு ஏஞ்சல்” (Version of Raangi) சுகிர்தகுமார் கிருஷ்மன் & ஹிமாபிந்து (Indian Actress) அவர்களின் இரண்டாவது இசைப்படைப்பு….

சுகிர்தகுமார் கிருஷ்மன் மற்றும் ஹிமாபிந்து இணைந்து உருவாக்கிய இரண்டாவது பாடலான “அவன் கனவில் ஒரு ஏஞ்சல் (Version of Raangi)” தற்போது ஹிமாபிந்து அவர்களின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களின் முதல் பாடலான “Spark of Angel” ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த புதிய பாடலும் அதேபோலவே ரசிகர்களின் இதயத்தை கவரும் மெலோடியுடன் வெளிவந்துள்ளது.
ஹிமாபிந்து அவர்கள் தற்போது இந்திய தமிழ் திரைப்படத் துறையில் தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக காஞ்சனா 4 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலின் இசை அமைப்பு, பாடல் வரிகள் மற்றும் பாடகனாகவும் திகழ்ந்துள்ளவர் —
அக்கரைப்பற்று அலயடியம்பைச் சேர்ந்த சுகிர்தகுமார் கிருஷ்மன்.
பாடலுடன் இணைந்து சில AI படக்காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன, இதனால் இசைக்கும் காட்சிக்கும் இடையே ஒரு புதிய அனுபவம் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
“ஸ்பார்க் ஆஃப் லவ்” பாடலைப் பார்வையிட….
https://www.youtube.com/watch?si=TsOVLkQG6J36v-Uz&v=TgnARzqoDV0&feature=youtu.be



