அரச காணிகளின் உள்ள பிணக்குகளை தீர்வுக்கும் நடமாடும் சேவை: திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில்…

ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகளில் உள்ள நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிணக்குகளை தீர்க்கும் முகமான இந் நடமாடும் சேவையானது திருக்கோவில் பிரதேச செயலாளர் கெளரவ.த.கஜேந்திரன் அவர்களின் தலைமையிலும் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் அனுசரனையுடன் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.
இவ் நடமாடும் சேவையில் அம்பாறை மாவட்ட தலைமை காணி உத்தியோத்தர் K.L.M.முஸம்மில் அவர்கள் பங்குபற்றியதுடன் இவ் அரச காணி பிணக்குகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ் நடமாடும் சேவையானது இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றதுடன் மேலும் தொடர்ச்சியாக இன்னமும் இரண்டு நாட்கள் (22, 23) இடம்பெறவுள்ளது.
மேலும் இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக காணிப்பிரிவினர்கள் ,மற்றும் காணி உத்தியோத்தர்கள், கிராம சேவை உத்தியோத்தர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காணிபிணக்குகள் உடைய பொதுமக்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.