இலங்கை
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்க திட்டம்

இலங்கையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான யோசனையொன்றை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுன மக்கள் முன்னணியின் மகளிர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டபோதே அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதனைத் தொிவித்துள்ளார்.
அதன்படி நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவையில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தொிவித்துள்ளார்.



