இலங்கை
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் இராணுவத்தின் வளங்களையும் உள்வாங்கி வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவி….

அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பானது இராணுவத்தின் வளங்களையும் உள்வாங்கி வறுமையான குடும்பங்களின் வாழ்வாதார தொழிலை மேம்படுத்தும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் முதல்கட்டமாக கோழி வளர்ப்புக்காக அமைக்கப்பட்ட கோழிக்கூடு மற்றும் இதர உதவிகள் திருக்கோவில் சங்கமன் கிராமத்தைச் சேர்ந்த இரு பயனாளிக் குடும்பங்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சிவில் இணைப்பு அதிகாரி லெப். கேணல் ஜானக விஜேரத்ன அவர்களும் இராணுவ உயர் அதிகாரிகள் , நிறுவன செயற்றிட்ட ஆலோசகர் திரு.வி.கமலதாஸ், நிறுவன பணிப்பாளர் திரு.வே.வாமதேவனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.