இறுதி போட்டிக்கு நுழையும் இரண்டாவது அணி எது ? டெல்லி- சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை


2020 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இறுதி போட்டிக்கு நுழையும் இரண்டாவது குவாலிபையர் சுற்று போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அபுதாவியில் நடைபெறவுள்ள இப்போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று இடம்பெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் குறித்த இரு அணிகளில் ஒன்று இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இன்று முக்கிய போட்டி என்பதனால் இரு அணிகளிலும் சில மாற்றங்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டேவிட் வோர்னர், கோஸ்வாமி அல்லது சஹா, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியாம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷீட் கான், ஷாபாஸ் நதீம், நடராஜன், சந்தீப் சர்மா ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை டெல்லி கப்பிட்டல்ஸ் அணியில், ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், அஸ்வின், காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.பி.எல். தொடரில் இதுவரை இடம்பெற்ற தொடர்களில் இறுதிப் போட்டியில் இதுவரை நுழையாத அணிகளில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.



