அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த ஆனிப்பௌர்ணமி மகோற்சவப் பெருவிழாவின் பாற்குட பவனி நிகழ்வு….


அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த ஆனிப்பௌர்ணமி மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.
மகோற்சவப் பெருவிழாவானது (04.07.2022) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளாந்த திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் 09ம் நாள் ஆகிய இன்று (12.07.2022) காலை நிகழ்வாக பாற்குட பவனியானது கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேக உட்சவமானது பெரும் திரளான பக்தர்கள் சூழ சிறந்தமுறையில் இடம்பெற்றது.
மேலும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய மகோற்சவப் நாளாந்த திருவிழாக்களில் வெளிவீதி உலாவின் போது சமய கருத்துக்கள் மற்றும் சமயம் தொடர்பான பேச்சு சொற்பொழிவை வழங்கும் மாணவர்களுக்கு விசேட பரிசில்கள் வழங்கும் செயற்பாடு ஆலய நிர்வாகத்தினரினால் சமயம் தொடர்பான அறிவை வளர்த்துக்கொள்ளும் மற்றும் மாணவர்களின் பேச்சு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுவும் சிறப்புடையதாக காணப்படுகின்றது.


















































