ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கலச சங்காபிசேக இலட்சாட்சனை…

அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கல சங்காபிசேக இலட்சாட்சனை மற்றும் தேங்காய் துருவல் சர்க்கரை அபிஷேக நிகழ்வானது இன்று (20) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இலங்கையில் பல ஆஞ்சநேயர் ஆலயங்கள் உள்ளபோதும் ஜந்து முகங்களுடன் ஐந்தடி உயரத்தில் திருக்காட்சி தரும் ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் கற்சிலை அமைந்துள்ள ஆலயங்களில் முக்கியத்துவம் மிக்கதான இவ்வாலயத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை நிகழ்வானது கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமாகி ஆஞ்சநேய ஜெயந்தி தினமான இன்று இடம்பெற்ற 108 சத அஸ்டோத்திர கலச சங்காபிசேகத்துடன் நிறைவுற்றது.
இன் நிகழ்வுகளில் பல பக்த அடியார்கள் கலந்து கொண்டு எம்பெருமானின் அருளைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.



