அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை: வைத்தியத்துறை இறுதிப்பரீட்சையில் தணிகாசலம் தர்சிகா முதல் தரத்தில் (First class) சித்தி….

வி.சுகிதாகுமார்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் கல்வி பயின்றுவந்த அக்கரைப்பற்று 7ஆம் பிரிவைச் சேர்ந்த தணிகாசலம் தர்சிகா ( Passed Final MBBS in first class with distinctions in medicine, surgery, obstetrics and gynecology, and psychiatry in Faculty of medicine , University of Colombo) இறுதிப்பரீட்சையில் முதல் தரத்தில் (First class) சித்தியடைந்து அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஓய்வு பெற்ற அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் மூத்த புதல்வியான இவர் தனது ஆரம்ப கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் பயின்றதுடன் 2012ஆம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் உயிரியில் துறையில் 3 ஏ சித்தியினை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 4ஆம் நிலையினையும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்திய துறையில் வைத்திய நிபுணராக (Consultant) வரவேண்டும் எனும் அவரது நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதுடன் அவர் உயர்வு பெற்று அக்கரைப்பற்று மண்ணிற்கு சேவை செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் வாழ்த்துகின்றனர்.