ஆலையடிவேம்பு
Trending

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை தேசிய மட்ட கராத்தே போட்டிகளில் சாதனை!!!

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டி கடந்த 12,13,14 ஆம் திகதிகளில் பண்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் 03 தங்கம் – 02 வெள்ளி – 02 வெண்கலம் அடங்கலாக மொத்தம் – 07 பதக்கங்களையும் பெற்றிருந்தது.

இதில் Team Kata பங்கு பற்றிய S.கிவோன்ஷ்டன், K.தரனிஷ், S.நவக்சன் ஆகியோர் தங்கப் பதக்கத்தையும் .

16 வயது ஆண்களுக்கான Kata பிரிவில் S.கிவோன்ஷ்டன் தங்க பதக்கத்தையும் K.தரனிஷ் வெண்கல பதக்கத்தினையும் 20 வயது பெண்களுக்கான Kata பிரிவில் T.நிதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும் 20 வயது ஆண்களுக்காக Kata மற்றும் Kumite பிரிவில் S. நவக்சன் வெள்ளி, தங்கப் பதக்கத்தையும்.

Team kumite பிரிவில் K.தரனிஷ், S.நவக்சன் ,K.சஜந்தன் வெண்கல பதக்கத்தையும் பெற்று தந்திருந்தார்கள்.

அத்துடன் 16, 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் Champion ஆக அக்கரைப்பற்று, இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைபாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் S. Navaksan இவ்வருடத்திற்கான சிறந்த கராத்தே வீரனாக தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக இவ்வருடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டியில் அக்கரைப்பற்று, இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை முதலாம் இடத்தினை சுவீகரித்து எமது பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார்கள்.

இம்மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் வெற்றிக்காக அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் அதிபர் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை சமூகத்தினர்கள் மற்றும் குறிப்பாக இம்மாணவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கிய ராம் கராத்தே டூ சங்கத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker