ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் நடாத்திய தைத்திருநாள் சிறப்பு பட்டிமன்றம்.

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் நடாத்திய தைத்திருநாள் சிறப்பு பட்டிமன்றம் நேற்றைய தினம் (17.01.2026) சனிக்கிழமை 02.30 மணியளவில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றக் கேட்போர்கூட மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு காரணம் சமூக சூழலா? குடும்ப சூழலா? எனும் தலைப்பில் ஆக்கபூர்வமாக சமூகத்திற்கு தேவையான முக்கிய படிப்பினைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இடம்பெற்றது.
பட்டிமன்றத்தின் நடுவரக இறைபணிச் செம்மல் திரு. த. கயிலாயபிள்ளை J.P அவர்கள் காணப்பட்டதுடன் பட்டிமன்ற பேச்சாளர்களாக V. குணாளன், S. மணிவண்ணன், பெ.தணிகாசலம், கே.கிஷ்ணமூர்த்தி, வி.சுகிர்தகுமார், சௌ.மிதுர்ஷன் ஆகியவர்கள் வாதப்பிரதிவாதங்களுடன் சிறந்த முறையில் பங்கேற்று இருந்தார்கள்.



